உயிர்ச்சத்து
உயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு […]