அன்னாசி
அன்னாசி (Pineapple: Ananas comosus அல்லது Ananas sativus) பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. ஒருவித்திலைப் பூத்தாவரங்கள் வகையுள் அடங்கும் புரோமிலியேசியே (Bromeliaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரம் அன்னாசி ஆகும். உடன் பழமாக அல்லது தகரத்தில் அடைத்து அல்லது சாறாக உண்ணப்படுகிறது. அன்னாசியில் வெல்லமும் மலிக் மற்றும் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் உயிர்ச்சத்து ‘பி’ (வைட்டமின் B) வகைகளான ‘பி1′,’பி2′,’பி6’ (B1, B2, B6) ஆகியனவற்றையும் உயிர்ச்சத்து ‘சி’யையும் மிகுந்தளவில் கொண்டுள்ளது. இதில் […]
கறிவேப்பிலை
சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்; நல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை, கருவேப்பிலை. கறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் […]
வாழை மருத்துவம்
வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் […]
எள்
எள் (Sesamum Indicum) அல்லது எள்ளு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ மூலிகை. இது ஒரு மந்திர மரம் என்றும் பழைய காலங்களில் அழைக்கப்பட்டது. செசாமம் இன்டிக்கம் எனும் தாவரவியற் பெயரைக்கொண்ட இச்செடியின் வேறு இனங்கள் ஆபிரிக்க காடுகளில் பெரும்பான்மையாகவும், இந்தியாவில் சிறிய அளவிலும் உள்ளன. எள்ளுச் செடியின் பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறம் கொண்டவை, எனினும் ஊதா, நீல நிறங்களிலும் பூக்கள் காணப்படுவதுண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. […]
இஞ்சி மருத்துவம்
இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும்.
மஞ்சள் ஒரு மூலிகை
மஞ்சள் (Curcuma longa) ஒரு மூலிகை இயல்புடைய தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சள், தமிழ்நாட்டில் ஈரோடு எனும் இடத்திலேயே உலகில் அதிகளவில் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் வேர்த்தண்டுக் கிழங்கு பச்சையாகவும் அல்லது உலர்ந்தபின் பொடி செய்து மஞ்சள் தூளாகவும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது. மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குர்க்குமின் (curcumin) ஆகும். இதுவே மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களுக்கு மூலப்பொருளாக விளங்குகின்றது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் […]