ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது. இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends).
இப்பண்புகளுள் முதன்மையானவை:
- அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius)
- அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy)
- இலத்திரன் நாட்டம் (electron affinity)
- இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity)
- உருகுநிலை, கொதிநிலை
- உலோகத் தன்மை
அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி அமைந்துள்ளது.