அசைவுப் பார்வையின்மை

அசைவுப் பார்வையின்மை அல்லது அசைவுக் குருட்டுத்தன்மை (அகைனேடோப்சியா; Akinetopsia; motion blindness) என்பது மிகவும் அரிதான நரம்பிய உளவியற் குறைபாடு ஆகும், இதில் ஒரு பொருளின் அசைவை நோயாளியால் நோக்க இயலாது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக சிறிய நேர இடைவெளிக்குள் தோன்றுபவற்றைப் படிமங்களை நோக்குவது போன்று அசைவுப் பார்வையின்மைக் குறைபாடுஉடையோர் நோக்குவர். எனவே ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை ஒருபோதும் இவர்களால் பார்க்க முடிவதில்லை.இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், இந்நிலையில் குவளையின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ள தேநீரை நோயாளி பார்க்கின்றார், ஆனால் குவளை முழுவதும் தேநீர் நிரம்பிவிட்டதைப் பார்ப்பதற்கு தாமதம் ஏற்படுகின்றது, எனவே தேநீரை குவளையின் கொள்ளளவையும் விட மிகையாக நிரப்புவதால் குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுகின்றது. அதாவது, நோயாளி முதலில் பார்த்தது குவளையின் அரைவாசிப் பாகத்தில் உள்ள தேநீரை என்று கொண்டால், பின்னர் அவர் பார்ப்பது குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதை ஆகும்.இந்நோய்க்கு இன்னமும் உகந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.அசைவுப் பார்வையின்மை காணொளி (ஆங்கிலத்தில் விளக்கம்)