Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

மஞ்சள் ஒரு மூலிகை

Table of Contents

மஞ்சள் (Curcuma longa) ஒரு மூலிகை இயல்புடைய தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சள், தமிழ்நாட்டில் ஈரோடு எனும் இடத்திலேயே உலகில் அதிகளவில் விருத்தி செய்யப்படுகின்றது. இதன் வேர்த்தண்டுக் கிழங்கு பச்சையாகவும் அல்லது உலர்ந்தபின் பொடி செய்து மஞ்சள் தூளாகவும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றது.

மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குர்க்குமின் (curcumin) ஆகும். இதுவே மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறு பயன்களுக்கு மூலப்பொருளாக விளங்குகின்றது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.தமிழரின் தொன்மையான உணவுப் பழக்கமுறைகளில் மஞ்சள் பயன்படுத்துதலும் ஒன்று. அன்றைய தமிழரின் மருத்துவத்தில் இன்றியமையாத மஞ்சளின் ஒவ்வொரு குணங்களும் இன்றைய அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

மருத்துவ ஆற்றல்கள் – பயன்படுத்தும் முறை

1.       நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல்: மஞ்சள் நீரை வீடுகளில் தெளித்தல் ஒரு சிறந்த நுண்ணுயிரித் தடுப்பாகும்.2.       காயங்கள், புண்கள்: அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம். மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, காயங்களுக்கும்புண்களுக்கும் போட்டால், விரைவில் ஆறாத காயங்கள் ஆறும்.3.       சேற்றுப் புண்: மஞ்சளையும், கடுக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து கலக்கவும். இரவுபடுக்கும் முன் கால் விரல்களைச் சுத்தம் செய்த பின் சேற்றுப் புண் வந்த  இடத்தில் தடவினால் சில நாட்களில் சேற்றுப்புண் குணமாகும்.  அல்லது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் கலந்து பூசி வரலாம்.4.       சமிபாட்டுக் குறைபாடு:கொஞ்சம் மஞ்சள் தூளை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அதனைக் குடித்தால் குணமாகும். சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை
எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. கறியில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம் இந்த விளைவைப் பெறலாம்.

5.       குடற்கிருமிகள் :மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரைவடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில்வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச்சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

6.       சளி (சலதோசம்): மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்துச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்குஇழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

7.       இருமல், தொண்டை எரிச்சல்: ஒரு டம்ளர் பாலில் மஞ்சள்தூள் அரைக் கரண்டி, பூண்டு, கொஞ்சம் கற்கண்டுசேர்த்து நன்கு காய்ச்சி சூட்டுடன் பருகினால் தொண்டை இதமாகும். மஞ்சள் தூளைதேனில் குழைத்துச் சாப்பிட்டால் விடாது இருக்கும் இருமல் அடங்கும். பாலில் மஞ்சள், மிளகு, பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல்
குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.

8.       கால் ஆணி: கொஞ்சம் மஞ்சள்,வசம்பு, கொஞ்சம் மருதாணி
இலை, கற்பூரம் ஆகியவற்றை அரைத்து காலாணிக்குக் கட்டி
வர குணமாகும்.

9.       சீழ்க் கட்டி, பரு, நகச்சுற்று: முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கும்.சூடாக்கிய சாதத்தோடு மஞ்சள் தூளைக் கலந்து பிசைந்து பாதிக்கப்பட்டஇடத்தின்மேல் சூட்டோடு பரப்பிக் கட்டுப் போட்டால் விரைவில் குணமடையும்.சுண்ணாம்பையும், மஞ்சளையும் சேர்த்துக் குழைத்துப் போட்டால் நகச்சுற்றுமறைந்துவிடும்.

10.   தோல் நோய்கள்:பச்சை மஞ்சள், அறுகம்புல், வேப்பிலை, பாசிப்பயிறு இவற்றைச் சேர்த்துஅரைத்து அவ்விழுதைக் குளிக்கும்முன் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்துவரவும். பெரும்பான்மையான சருமத் தொல்லைகள் நீங்கும். மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல்தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப்போக்கிவிடும். மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும்.மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும்.

11.   பித்தவெடிப்பு:மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

12.   காதில் சீழ் வடிதல்: மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டிவைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல்நின்றுவிடும்.

ஏனைய மருத்துவ குணங்கள்

 • ·         மஞ்சள்தூளில் இருக்கும்குர்க்குமின்(curcumin) வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட்புரதப்படிவுகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள், இதுவே அகவை முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர்நோய்க்கான (Alzheimer’s disease) காரணம் ஆகும், எனவே மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அல்சைமர் நோய்வருதலைத் தடுக்கமுடியும்.
 • ·         புற்றுநோய் உயிரணுக்களைக் கொல்ல வல்லது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக உணவுக்குழாய், குடற்புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கவும், குணமடையச்செய்யவும் மஞ்சள் உதவுகின்றது.
 • ·         மஞ்சள் ஒரு சிறந்த ஒட்சியேற்று எதிரி, நச்சு எதிர்ப்பி ஆகும். இதனால் புற்றுநோய்கள், மாரடைப்பு என்பன வரும் ஆபத்து குறைக்கப்படுகின்றது.
 • ·         வாத நோய்களைக் குணப்படுத்துமா என்பது ஆய்வில் உள்ளது. எனினும் வாத நோயால் ஏற்படும் நோயை முறிக்கின்றது எனத் தெரியவந்துள்ளது.

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் இன்னமும் ஆராய்வில் உள்ளது.

மஞ்சள் உபயோகம் தவிர்க்கப்படவேண்டியவர்கள் (கூடுதல் அளவில் பயன்படுத்தல்)

 • ·         சிலவகை இதயச் செயற்பாட்டு இழப்பு
 • ·         கல்லீரல் நோய்கள், பித்தப்பைக் கற்கள் உடையவர்கள்
 • பின்வருவோருக்கு மருத்துவரின் ஆலோசனை தேவை:
 • ·         கர்ப்பமுற்ற தாய்மார், கர்ப்பமுற எதிர்பார்த்து இருக்கும் குழந்தைகள் இதுவரை பிறக்காதோர், பாலூட்டும் தாய்மார்
 • ·         குருதி உறையா நோய் உள்ளோர்
 • ·         வேறு மாத்திரைகள் பயன்படுத்துவோர்

வெளி இணைப்புக்கள்

 1. http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/blog-post_25.html
 2. http://www.theni.in/nature_medicine_detail.php?recordID=43
 3. http://maruththuvam.blogspot.com/2006/02/blog-post_114060516204835430.html
 4. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2859:2010-01-29-10-33-01&catid=44:general&Itemid=123
 5. http://ta1.chinabroadcast.cn/1/2005/08/24/21@24142.htm
 6. http://chiththan.blogspot.com/2005/11/3.html
 7. http://en.wikipedia.org/wiki/Turmeric
 8. http://www.bbc.co.uk/news/science-environment-12849781
 9. http://news.bbc.co.uk/2/hi/health/8080630.stm
 10. http://www.nutritional-supplement-educational-centre.com/turmeric-benefits.html
 11. http://news.bbc.co.uk/2/hi/health/8328377.stm