Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

வேதியியல் விதிகள்

Table of Contents

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு வேதியியல் விதிகள் சொல்லப்பட்டன. 1789 இல் அன்ரனி லாவோசியர் (Antoine Lavoisier) திணிவுக் காப்பு விதியை (law of conservation of mass) வழிமொழிந்தார், இதன்படி வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும்.

ஜோசெப் லூயிஸ் புரௌஸ்ட் (Joseph Louis Proust ) என்பவரால் திட்டவிகிதசமவிதி அல்லது மாறாவிகிதசமவிதி (Law of definite proportions / law of constant composition) நிறுவப்பட்டது: ஒரு சேர்மம் எந்தமுறையில் ஆக்கப்பட்டிருப்பினும் அதில் உள்ள தனிமங்களின் (மூலகங்களின்) திணிவு விகிதங்கள் ஒரு மாறிலி ஆகும். ஜோன் டால்டன் என்பவர் இவ்விதியுடன் தொடர்பு கொண்டதாக பல்விகிதசமவிதியை (law of multiple proportions)  உருவாக்கினார்: இரு மூலகங்கள் சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்வைகளை (சேர்மம்) ஆக்கும்போது ஒரு மூலகத்தின் குறித்த திணிவுடன் சேரும் மறு மூலகத்தின் திணிவு விகிதங்கள் முழு எண்களில் இருக்கும்.