கூம்புச்சுரப்பி
கூம்புச்சுரப்பி அல்லது கூம்புருவுடல் அல்லது “மூன்றாவது கண்” அல்லது பீனியல் சுரப்பி (pineal body, epiphysis cerebri, epiphysis ) எனப்படும் சுரப்பி நாளமில்லாச் சுரப்பிகள் (அகஞ்சுரக்கும் சுரப்பிகள்) வகையைச் சார்ந்தது. இது முள்ளந்தண்டு விலங்குகளின் மூளையில் காணப்படுகின்றது; செரடோனினுடைய வழிப்பொருளான மெலடோனின் என்னும் இயக்கு நீரைச் (hormone) சுரக்கின்றது. மெலடோனின் விழித்தெழல் – துயில்கொள்ளல் சுழற்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அமைப்பு இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகாமையில் இரு மூளை அரைக்கோளத்தின் இடையில் அமைந்துள்ளது. இது […]
உடற்கூற்றியல் அறிமுகம்
உடற்கூற்றியல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் பாகங்கள் பற்றிய ஆய்வு ஆகும். மனிதனின் உடல் அமைப்புப் பற்றிய ஆய்வு மனித உடற்கூற்றியல் ஆகும். சொற்பிறப்பியல்: உடற்கூற்றியல் (கிரேக்க anatomē, ‘பிரித்தல்’) மனித உடற்கூற்றியல் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது: விழி நோக்கு உடற்கூற்றியல் விழி நோக்கு உடற்கூற்றியலில் உடல் அமைப்புக்கள் வெற்றுக் கண்ணால் ஆய்வு செய்யப்படுகின்றது. இதைப் பின்வருமாறு கற்றுக்கொள்ளலாம்: நுண் நோக்கு உடற்கூற்றியல் நுண் நோக்கு உடற்கூற்றியல் அல்லது இழையவியல் என்பது உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றின் உடற்கூற்றியலை […]
முரசு நோய்கள் (ஈறு நோய்கள்)
(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது)சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன. முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் இழையங்கள் […]
புளோரைடு : குறைபாடும் நச்சுமையும்
புளோரின் (F) எனும் தனிமத்தின் அயன் வடிவமே புளோரைடு (F-) ஆகும், இது இயற்கையில் பல்வேறுபட்ட மூலங்களில் கிடைக்கின்றது. ஆப்பிள், தேநீர், கனிப்பொருள் நீர் (mineral water), கல்லீரல், மீன், முட்டை, கடல் உணவுகள் போன்றவற்றில் இயற்கையாகவே கிடைக்கின்றது. புளோரின் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து அல்ல, எனினும் இது பற்சொத்தையைக் கட்டுப்படுத்துவது மற்றுமன்றி, கல்சியம், உயிர்ச்சத்து ‘டி’யுடன் சேர்ந்து என்புக்கோறை நோய் (osteoporosis) வராமல் தடுக்கவும் உதவுகின்றது. பல் மருத்துவர்களால் பற்களைச் சுத்தம் செய்த பிற்பாடு பயன்படுத்தப்படுகின்றது. இதய நோய்கள் […]
அன்னாசி
அன்னாசி (Pineapple: Ananas comosus அல்லது Ananas sativus) பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. ஒருவித்திலைப் பூத்தாவரங்கள் வகையுள் அடங்கும் புரோமிலியேசியே (Bromeliaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரம் அன்னாசி ஆகும். உடன் பழமாக அல்லது தகரத்தில் அடைத்து அல்லது சாறாக உண்ணப்படுகிறது. அன்னாசியில் வெல்லமும் மலிக் மற்றும் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் உயிர்ச்சத்து ‘பி’ (வைட்டமின் B) வகைகளான ‘பி1′,’பி2′,’பி6’ (B1, B2, B6) ஆகியனவற்றையும் உயிர்ச்சத்து ‘சி’யையும் மிகுந்தளவில் கொண்டுள்ளது. இதில் […]
கறிவேப்பிலை
சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்; நல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை, கருவேப்பிலை. கறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் […]
வாழை மருத்துவம்
வாழை ஒரு பூண்டுத்தாவர வகையாகும். மியுசா (musa) எனப்படும் பேரின (இலங்கை வழக்கு: சாதி) வகைக்குள் வாழை அடங்குகின்றது. வாழை முதல் தோன்றிய இடம் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும். மியுசா அக்குமினாட்டே (Musa acuminate), மியுசா பல்பிசியானா (Musa balbisiana) என்பனவும் இவை இரண்டையும் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்திப் பெறப்படும் மியுசா அக்குமினாட்டே X பல்பிசியானா (Musa acuminata × balbisiana ) கலப்பினமும் வாழையின் உயிரியற் பெயர்கள் ஆகும். பழைய உயிரியற் […]
எள்
எள் (Sesamum Indicum) அல்லது எள்ளு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ மூலிகை. இது ஒரு மந்திர மரம் என்றும் பழைய காலங்களில் அழைக்கப்பட்டது. செசாமம் இன்டிக்கம் எனும் தாவரவியற் பெயரைக்கொண்ட இச்செடியின் வேறு இனங்கள் ஆபிரிக்க காடுகளில் பெரும்பான்மையாகவும், இந்தியாவில் சிறிய அளவிலும் உள்ளன. எள்ளுச் செடியின் பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறம் கொண்டவை, எனினும் ஊதா, நீல நிறங்களிலும் பூக்கள் காணப்படுவதுண்டு. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. […]
இஞ்சி மருத்துவம்
இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும்.
கண் தகவமைவு மற்றும் ஒளிவிலகல் கோளாறுகள்
accommodation and refraction disorders