வாழை இலை

வாழை இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தன. தோலில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் தோலுக்கு மெருகேற்றி அழகைக் கூட்டுகின்றது. இது இலையாக அல்லது அதிலி இருந்து எடுக்கும் சாறாகப் பயன்படுகின்றது.

  • தோலில் ஏற்படும் சிறிய புண்கள் மற்றும்  வேறு  தோல் நோய்களான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு, தீப்புண் , வேனிற் கட்டி (sunburn) போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் குணமடையும்.
  • குளிர்ந்த நீரில் நனைத்த வாழையிலையை தீக்காயங்கள், வேனிற் கட்டி ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியை ஏற்படுத்தும். தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய்க் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
  • சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும். சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் போன்ற  பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.
  • நச்சுப் பூச்சிக்கடி, தேனீ, குளவிக்கடி,  சிலந்திக்கடி, தோல் அரிப்பு போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.
  • மனிதன் மற்றும் குரங்கினம் தவிர பிற பாலூட்டிகளின் பியூரின் (purine) சிதைமாற்ற விளைபொருளான ஆலன்டொயின் எனும் பதார்த்தம் ஈரப்பதமாக்கும் மற்றும் தோல்பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது தாவரங்களிலும் காணப்படுகின்றது. இதை அழகு சாதனைப் பொருட்களில் செயற்கையாகச் சேர்க்கின்றனர். வாழையிலையிலும் இது காணப்படுவதால் நுண்ணுயிரிகளில் இருந்து தோலைப் பாதுகாத்தலிலும் புதிய தோல் உயிரணுக்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றது.
  • குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாகச் சொன்னால், தோலைப் பாதுகாக்கவும் அழகுடன் மிருதுவாக மெருகுடன் விளங்கச் செய்யவும் வாழை இலை உதவுகின்றது.