வாழைத்தண்டு

உடல் எடை குறைய: ஒருநாள்விட்டு ஒருநாள் சமைத்துச் சாப்பிட்டால் உடல் கொழுப்பு குறைந்து இளைக்கலாம். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், குருதியில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.

கொசுக்கடி: கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும்.

முகப்பரு: முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும்.

சிறுநீரக நோய்கள்: சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், நீரடைப்பு, சிறுநீரகத்தில் கல் போன்ற சிறுநீர் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளுக்கும்  வாழைத்தண்டு சிறந்தது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

மாதவிடாய்: மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

நீரிழிவு, வயிற்றுப்புண், தோல் நோய்கள், வயிற்றுப் பூச்சி, பல்லில் பூச்சி, மஞ்சள்காமாலை போன்றவற்றிற்கு அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கும் வாழைத்தண்டு உகந்ததல்ல.