Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

கலம் (உயிரணு)

Table of Contents

உயிரணு உயிரியல்”’ அல்லது ”’கலவுயிரியல்”’ (Cell biology) என்பது உயிரணுக்களைப் பற்றிய அறிவியல் கல்வி ஆகும், இங்கு அவற்றின் இயல்பு, கட்டமைப்பு,  (நுண் உறுப்பு) புன்னங்கங்களின் அமைப்பு, தொழிற்பாடு, அவை அமைந்துள்ள சூழலுடன் ஏற்படும் இடைவினைகள், வாழ்க்கை வட்டம், கலப்பிரிவு, இறப்பு என்பன ஆராயப்படுகின்றது. இவை நுண்நோக்கி கொண்டு மற்றும் மூலக்கூற்றுத் தரத்தில் ஆராயப்படுகின்றது. உயிரணு உயிரியலில் நிகழும் ஆராய்வுகளால் பாக்டீரியா, முதலுயிரி போன்ற ஒருகல உயிரிகளின் மற்றும் சிறப்பு உயிரணுக்களால் உருவான மனிதர் போன்ற பல்கல உயிர்களின் பல்வகைமை தெளிவாக அறியப்படுகின்றது.உயிரணுக்களையோ அல்லது அவற்றின் உள்ளடக்கங்களையோ அவற்றின் தொழிற்பாடு தொடர்பாக ஆராய்வது உயிரியல் அறிவியலில் முதன்மையானது. உயிரணுக்களின் ஒற்றுமை, வேற்றுமைகள் பற்றிய அறிவு வெவ்வேறு துறைகளுக்கு துணை நிற்கின்றது; மூலக்கூற்று உயிரியல், புற்றுநோய் ஆராய்ச்சி, உயிர் வளர்ச்சியியல் போன்ற துறைகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. உயிரணு உயிரியல் ஆராய்வு வேறு துறைகளான மரபியல், உயிர் வேதியியல், மூலக்கூற்று உயிரியல், நோய் எதிர்ப்பியல், உயிர் வளர்ச்சியியல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. 

நிகழ்வுகள்

ஒரு உயிரணுவில் பற்பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன, உயிரணுக்களின் வகையைப் பொறுத்தும் உயிரினத்தின் தேவையைப் பொறுத்தும் உயிரணுக்கு உயிரணு இவை வேறுபடுகின்றது, ஆனால் அனைத்து உயிரணுக்களுக்கும் பொதுவான நிகழ்வுகளும் உண்டு.
# புரதத்தொகுப்பும் பின்னர் தொகுக்கப்பட்ட புரதத்தை நகர்த்துதலும்
# மூலக்கூறுகளை உயிரணுக்குள்ளேயும் வெளியேயும் செலுத்துதல்
# தன்னிச்சைத் தின்குழியம் – இந்நிகழ்வில் ஒரு உயிரணு தனது சொந்த நுண் உறுப்பையோ அல்லது ஆக்கிரமித்த நுண் உயிரிகளையோ “தின்னுதல்” (உட்கொள்ளல்)
# ஓட்டல் – இரு அண்மித்த உயிரணுக்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் இழைய அமைப்பைப் பேணுதல்
# இனப்பெருக்கம் – விந்தணுவும் சூலும் இணைவதால் கருக்கட்டல் நிகழ்வு உண்டாகின்றது
# உயிரணு அசைவு – வேதி ஈர்ப்பு, சுருக்கம், பிசிர், கசையிழை

உயிரினங்கள் அனைத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு, செயற்பாட்டு அலகு உயிரணு (கலம்) ஆகும். உயிரினங்கள் தனியொரு உயிரணுவாலோ அல்லது பல உயிரணுக்களின் சேர்க்கையாலோ ஆக்கப்பட்டவை. தனியொரு உயிரணுவினால் உருவான உயிரினங்களாக அமீபா, பக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள் பல்லுயிரணுக்களுக்கு உதாரணமாகும்.

உயிரணு

விலங்குகளின் உயிரணு தாவரங்களினதில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. விலங்குகளில் உயிரணுக்கள் பல சேர்ந்து இழையங்களாகவும் (tissue) பல இழையங்கள் சேர்ந்து உறுப்புக்கள் (organs) தோன்றியும் உறுப்புக்களின் தொகுப்பு தொகுதியாகவும் (system) இறுதியில் பல தொகுதிகள் சேர்ந்து ஒரு உயிரினமாகின்றது.உயிரணு –> இழையங்கள் –> உறுப்புக்கள் –> தொகுதி –> உயிரினம்