இஞ்சியின் பொதுவான குணங்கள்

இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது.

இலைப்பகுதி உலர்ந்ததும் இஞ்சியின் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.

உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும்.(?) அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.