இஞ்சியின் மருத்துவ குணங்கள்

பொதுவாக  செரிமானம் தொடர்பான வயிற்று வலிகள், பயணப்பிணியால் ஏற்படும் குமட்டல், பசியின்மையைப் போக்கல், இருமல் போன்ற சுவாச நோய்கள், மூட்டுவலி போன்றனவற்றில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி உதவுகின்றது. இவை தொன்றுதொட்டு உபயோகத்தில் இருக்கும் இஞ்சியின் மருத்துவப் பண்புகள் ஆகும்.

நாட்டு மருத்துவத்தில் இஞ்சியைப் பல்வேறு நோய்களைத் தீர்க்கவல்ல மூலிகையாகக் கருதுகின்றனர். இவை செவி வழிவந்த தகவல் எனினும் பல உபாதைகளை இஞ்சி தீர்க்கின்றது என்பது பலர் கண்டறிந்த உண்மை. இங்கு கீழே பட்டியலிப்பட்டவை இஞ்சியின் சில மருத்துவ குணங்கள் ஆகும்.

  • குமட்டல், வாந்தி: இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியனவற்றை தேனுடன் கலந்து ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது கொடுத்துவர குமட்டல், வாந்தி நீங்கும். சுட்ட இஞ்சியும் பித்த கப நோய்களைத் தீர்க்கும்.
  • தோல் வியாதிகள்: உலர் சருமம், சிரங்கு
  • செரிமானம்: இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அகற்றி உடலுக்குப் புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் இஞ்சிச் சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை கரையும்.
  • இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
  • இதய நோய்: குருதிக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கவல்லது என்று நம்பப்படுகின்றது. இதன் மூலம் இஞ்சியானது மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் ஒரு மூலிகையாக விளங்குகின்றது.
  • இஞ்சிச் சாற்றுடன், வெங்காயச் சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.(?)
  • இஞ்சியைத் தேனீரில் கலந்து குடிப்பதும் ஒரு பயன்தரும் முறையாகும்.