இஞ்சி

பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள்.

பெயர்த் தோற்றம்

இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல், சுவறுதல் அல்லது உறிஞ்சுதல் எனப்பொருள். இஞ்சி என்றால் கோட்டை மதில் என்றும் பெயர். இவற்றில் இருந்து பெயர் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இலத்தின் பெயரான Zingiber தமிழ் மற்றும் மலையாளச் சொற்களான இஞ்சி + வேர் என்பவற்றில் இருந்து தோன்றி இருக்கலாம்.

Zingi (இஞ்சி) + ber (வேர்)

வேறு பெயர்கள்

அல்லம், ஆசுரம், ஆத்திரகம், ஆர்த்திரகம், கடுவங்கம்

உலர்ந்த இஞ்சி: சுக்கு, வேர்க்கொம்பு, சுச்சு

கண்டாத்திரிலேகியம் என்பது இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இலேகியம் ஆகும்.