உடற்கூறியலில் பயன்படுத்தப்படும் சொற்கள் உடற்கூறியல் கலைச்சொற்களாகும். அவை பண்டைய கிரேக்க அல்லது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட பின்னொட்டுகள், முன்னொட்டுகள் மற்றும் மூல வார்த்தைகளால் ஆனவை. உடற்கூறியல் சொற்களின் அறிவு இல்லாமல், ஒரு மருத்துவ நிபுணர் உறுப்புகளின் இருப்பிடம், உறுப்புகளின் நிலை அல்லது அவற்றின் அசாதாரணங்கள், மூட்டுகளின் செயல்பாடுகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் பற்றி அறியமுடியாது.
உடற்கூறியல் கலைச்சொற்களைப் பயன்படுத்த, உடல் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும், கைகள் பக்கவாட்டில் தொங்கி இருக்க வேண்டும், கைகளின் உள்ளங்கைகள் முன்னோக்கி, மற்றும் கட்டைவிரல்கள் உடலை விட்டு விலகி வெளிநோக்கியும், கால்கள் சமாந்தரமாகவும் காற் பெருவிரல் முன்னோக்கி நீட்டப்பட்டும் இருத்தல் வேண்டும். இது உடற்கூறியல் நிலை என்று அழைக்கப்படுகிறது.
விளக்க நோக்கத்திற்காக, உடற்கூறியல் நிலையில் உள்ள உடலானது மூன்று கற்பனையான வெட்டுத்தளங்களால் பிரிக்கப்படுகின்றது.
மண்டை ஓட்டின் வகிட்டுப்பொருத்துக்கு இணையாக உச்சி வகிட்டில் செல்லும் நெடுக்குவெட்டுத்தளம். இதனை முன்பின் தளம் எனவும் அழைக்கலாம். இதன் மையத்தில் செல்லும் தளம் மையத்தளம் (Median plane) என அழைக்கப்படுகின்றது. இது உடலை இடது மற்றும் வலது என இரு சமச்சீர்க் கூறுகளாகப் பிரிக்கிறது. மையத்தளம் நோக்கிச் செல்லும் உடலின் பகுதி மையவாட்டு (Medial) எனவும் மையத்தளத்தில் இருந்து வெளி நோக்கிச் செல்பவை பக்கவாட்டு (lateral) எனவும் அழைக்கப்படுகின்றது.
இது முன்புறத்தை பின்புறத்திலிருந்து பிரிக்கிறது.
Epi-, Hyper-, Supra-, Super- ஆகியன “மேலே” எனும் கருத்தைத் தருகின்றன.
Sub-, Hypo-, Infra- ஆகியன “கீழே” எனும் கருத்தைத் தருகின்றன.