உயிர்ச்சத்துச் சமகூறு (vitamer)

உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர் வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் கொண்டிருக்கும். இவற்றின் தொழில் குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை எடுத்துக்கொண்டால் அதற்கு சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெதயில்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும்.

உயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு இரசாயனத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது.