Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

மனிதர்களில் உயிர்ச்சத்து

மனிதர்களுக்கு அத்தியாவசியமான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளது, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலில் இருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலில் இருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அதிகூடிய […]

உயிர்ச்சத்து வரலாறு

ஆரோக்கியத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டுவிட்டது. புராதன எகிப்தியர்கள் மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து A குறைபாடாக அறியப்பட்டுள்ளது.(3) ஊட்டச்சத்து பற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது. அன்றைய காலத்தில் கடல் பிரயாணம் செய்யும் மாலுமிகளுக்கு உகந்த ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் காயங்கள் குணப்படாமை, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் […]

உயிர்ச்சத்துச் சமகூறு (vitamer)

உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர் வேதியல் செயற்பாடுகளுக்கமையவே பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் கொண்டிருக்கும். இவற்றின் தொழில் குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை எடுத்துக்கொண்டால் அதற்கு சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெதயில்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும். உயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு இரசாயனத்தாக்கங்களுக்கு […]

நுதல் எலும்பு

நுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது: * நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama frontalis); * கட்குழிப்பகுதி: கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்கும் கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (pars orbitalis) பகுதி. ==செதிலுருப்பகுதி (squama)== செதிலுருப்பகுதி (squama frontalis) வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு ஆகிய இரு மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளது: . வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் […]

சுவரெலும்பு

மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும்மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும்.இது வலது இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது.ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது. மேற்பரப்புக்கள் வெளி மேற்பரப்பு வெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டுவளைந்த வரிகள்காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal […]

பரட்டின் உணவுக்குழாய்

பரட்டின் உணவுக்குழாய் (Barrett’s esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை.இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு ஏற்படலாம். […]

கண்டிடா உணவுக்குழாய் அழற்சி

கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (Esophageal candidiasis) என்பது கண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans) என்னும் பூஞ்சையால் (ஒரு வகை மதுவம்) ஏற்படும் தருணத் தொற்று ஆகும். எய்ட்ஸ் உட்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரில் இந்நோய் ஏற்படுகின்றது, பூஞ்சை முக்கியகூறாகக் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பியை[1] நீண்டகாலமாகப் பயன்படுத்துவோருக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. நோய்த் தோற்றம் கண்டிடா உணவுக்குழாய் அழற்சி உடையவருக்கு மார்பெலும்பின் பிற்பகுதியில் விழுங்கும்போது வலி (விழுங்கல்வலி) ஏற்படுகின்றது.[1] நீண்டகால கண்டிடா அழற்சியால் எடை குறைவடையும். இத்தகைய […]

உணவுக்குழாய் அழற்சி

உணவுக்குழாய் அழற்சிஅல்லதுஉணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இதுகடியதாகவோஅல்லதுநெடுங்காலத்துநோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீழ்உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்துஉணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோஇருக்கலாம். காரணங்கள் தொற்று நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன: கண்டிடா உணவுக்குழாய் அழற்சி  (Esophageal candidiasis) தீநுண்ம உணவுக்குழாய் அழற்சி கேர்ப்பிசு (herpes esophagitis) பெருங்குழியத் தீநுண்மம் (cytomegalovirus) […]

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு  பாதிப்புறுவதால் இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும்  முக்கிய அறிகுறியாக நெஞ்செரிவு விளங்குகிறது. இந்நோய் உடையவர்களுக்கு மேலும் ஒரு அமிலப் பின்னோட்டம் ஏற்படலாம்; உணவுக்குழாயில் இருந்து அமிலம் மேலும் மேற்செல்வதால் ஏற்படுகின்றது, இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும். இதனால் மூச்சு வழி தொடர்புடைய அறிகுறிகள் […]

உள்ளுறுப்பு இடப்பிறழ்வு

உள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக எவ்வித இடர்களோ நோயறிகுறிகளோ இருப்பதில்லை. […]

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis)

பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும், (1) இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றன. நோய் உடற்செயலியல் பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிபுரிகிறது. […]

இதய முணுமுணுப்பு (Heart murmur)

இதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச்சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]

அடைப்பிதழ் நோய்களின் வகை

அடைப்பிதழ் குறுக்கம் (stenosis) குறைதிறன் (Insufficiency) / பின்னொழுக்கு (regurgitation) பெருந்தமனி அடைப்பிதழ் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு இருகூர் அடைப்பிதழ் இருகூர் அடைப்பிதழ்க் குறுக்கம் இருகூர் அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு முக்கூர் அடைப்பிதழ் முக்கூர் அடைப்பிதழ்க் குறுக்கம் முக்கூர் அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு நுரையீரல் அடைப்பிதழ் நுரையீரல் அடைப்பிதழ்க் குறுக்கம் நுரையீரல் அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு ஒவ்வொரு அடைப்பிதழிலும் குறுக்கம், குறைதிறன் என இருவகையான குறைபாடுகள் ஏற்படலாம்: குறுக்கம் அடைப்பிதழின் இதழ்கள் திறக்கும்போது உருவாகும் […]

இதய அடைப்பிதழ் (Heart Valve)

இதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர்) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது. மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.இதயத்தில் காணப்படும் நான்கு வகையான […]

இதய நிறுத்தம் (Cardiac arrest)

இதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]

இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்

இணையங்களை உருவாக்குவது பற்றிய சிறிய அறிவும் CMS-சும் சேர்ந்தால்ஒரு வல்லுனர் உருவாக்குவதனைப் போன்ற இணையத்தளம் அமைக்கலாம். இணையங்கள்உருவாக்கத் தேவையான குறியீட்டு மொழிகளோ (markup languages) அல்லது படிவமொழிகளோ (Scripting languages) இங்கு பெரிதாகத் தெரிந்திருக்கத் தேவைஇல்லை, எனினும் அவற்றைப் பற்றிய அடிப்படை தெரிந்திருத்தல் அவசியமே. இந்தக் கட்டமைப்பு எவ்வாறு தொழிற்படுகிறது? விளக்கப்படத்தைச் சற்றுக் கவனித்தால் இங்கே தரவுத்தளம், இணையத்திற்குத் தேவையான படிமங்கள், ஆவணங்கள் வழங்கிக் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும். CMS மென்பொருளில் ஆவணங்களை அல்லது தரவுகளை வகைகளாகப் பிரிக்க ஏற்பாடுகள் உள்ளது, இதன் மூலம் தரவுகள் வகைப்படுத்தப்படும். உதாரணமாக, ஒரு பாடசாலை இணையம் எனின், பாடசாலை […]

உங்கள் கணினியில் சேவையகம்

கணிணித்துறையில், பயனர்களுக்குத் தேவையான சேவைகளை அளிக்க வன்பொருள் அல்லது மென்பொருளால் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுவதே சேவையகம் அல்லது வழங்கி (server) எனப்படுகிறது. இவ் வார்த்தை ஒரு சேவையக இயங்குதளத்தைக் கொண்ட ஒரு கணிணியைக் குறிக்கும், அல்லது சேவை அளிப்பதற்கு பொருத்தமான மென்பொருள் அல்லது  வன்பொருளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிக்கும். இத்தகைய சேவையகக் கணினிகள் மிகவும் வலுக்கூடியவையாகவும் விலை கூடியவையாகவும் உள்ளதால் மற்றும் வேறு காரணங்களால் இவற்றை எல்லோரும் பயன்படுத்த முடிவதில்லை, எனினும் சேவையக இயங்குதளம் இல்லாமல் சாதரணமாக நீங்கள் […]

திரளப் பெயர் (domain name) & இணைய இடம்

இணைய முகவரியைப் பொருத்தவரை அது டொமைன் (domain) அல்லது திரளம் என அழைக்கப்படுகிறது. www.thamilkalvi.com மேற்குறிப்பிட்ட இணைய முகவரியில் மூன்று பகுதிகள் உள்ளன. “www” , “பெயர்”, “com” இங்கு “www” இல்லாமலேயே thamilkalvi.com இயங்கும், இதனை உயர் நிலைத் திரளம் (Top Level Domain) என்கின்றோம். இவற்றில் பின்னொட்டுக்கள் ‘.com’, ‘.org’, ‘.net’, ‘.co.in’, ‘.edu, ‘.info’, ‘.me’ என்று பலவகையில் அடங்கும். எ.கா: sakthivel.me துணைத் திரளம் (Sub Domain) என்பது பிரதான பெயருக்கு முன்னர் வரும் முன்னொட்டு ஆகும். அனைவரும் […]

விசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்

சென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும்  எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில்  New Project […]

பகுதி – 1: உங்கள் முதல் விசுவல் பேசிக் மென்பொருள்

உங்களது முதல் மென்பொருளை இந்தப் பயிற்சியின் இறுதியில் உருவாக்க முடியும். இப்பாடத் தொடரில் வெவ்வேறு வகுப்பில் கூறப்படவுள்ள ஒவ்வொரு படிமுறைகளையும் விளங்கிக்கொள்ளும்போது  Visual Studio 2012 இன் ஒவ்வொரு கூறுகளையும் அறியும் வாய்ப்பு உண்டாகும். முதலில் ஒரு “வணக்கம் தமிழா!” எனும் சிறிய மென்பொருளை உருவாக்குவோம். Windows Forms Application Project உருவாக்கல் கோப்பு (File) பட்டியில்  New Project என்பதைத் தெரிவு செய்க. பின்னர் Visual Basic, Windows Forms Application என்பதைத் தெரிவு செய்க. […]